ஓமனுக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்த யுஏஇ….!

Date:

உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டி லீக் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் தகுதிச்சுற்று தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் யுஏஇ – ஓமன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வாசிம் மற்றும் முஸ்தபா தலா 8 ரன்னில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய அரவிந்த் 49 ரன், ரமீஸ் 38 ரன் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் அவுட்டான பின்னர் களம் இறங்கிய ஆசிப் கான் 27 ரன், பாசில் ஹமீது 8 ரன், அலி நசீர் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ஆயன் அபல் கான் மற்றும் கார்த்திக் மெய்யப்பன் ஜோடி சேர்ந்தனர். இதில் மெய்யப்பன் 7 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி ஆட உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....