இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2023

Date:

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். எண்ணிய எண்ணங்கள் ஈடேற பொறுமை தேவை. வீணான விஷயங்களைப் பற்றிய சிந்தனையை ஒழிப்பது நல்லது. தகுதிக்கு மீறி ஆசைப்படாதீர்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீர முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுடைய வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். நல்ல நண்பர்களை மட்டும் உடன் வைத்திருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. செலவுக்கு உரிய வரவும் இருக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. கேட்ட இடங்களில் இருந்து கேட்ட விஷயங்கள் கிடைக்கப்பெறும். எவரிடமும் உங்களை நீங்களே தாழ்வு மனப்பான்மையுடன் காட்டிக் கொள்ளாதீர்கள்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்வுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதில் ஒரு புது தெம்பு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். குடும்ப உறவுகளால் மகிழ்ச்சி நிறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும். வீண் பேச்சுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். வரவேண்டிய பணம் கைக்கு வருவதில் காலதாமதம் ஆகலாம். எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நல்ல நாளாக இருக்கிறது. பொது இடங்களில் உங்களுடைய நீண்ட நாள் கண்ணோட்டம் மாறும். அடுத்தவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்..

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனம் புரியாத மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற போகிறது. மனதிற்கு பிடித்தவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீண் பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. பொது நலன்களில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலருடைய அன்புத் தொல்லையை அனுபவிக்க வேண்டி இருக்கும். காலம் கடந்து எதையும் சிந்திக்காதீர்கள். தொலைதூரப் பயணங்களின் பொழுது வாகன பராமரிப்பு செய்வது நல்லது. புதுமை படைக்க வாய்ப்புகளை பெறுவீர்கள். மன கவலைகளை அகற்றி மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் கைகலப்பு ஏற்படலாம் கவனம் வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் சிலர் செயல்படுவீர்கள். பிற்போக்கு சிந்தனையை ஒழித்துக் கட்டுவது நல்லது.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில சங்கடங்கள் தீரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நயமான பேச்சு வார்த்தையால் எளிதாக வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியத்தை ஒரே முறையில் முடிக்க முடியாமல் போகலாம். இழுப்பறியில் இருந்து வந்த தொகை கைக்கு சேரும். கற்பனை வளம் அதிகரித்து காணப்படும்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எதையும் அவசரப்பட்டு செய்யாதீர்கள் பின்னர் வருத்தப்பட நேரிடும். சிலர் குற்ற உணர்வுக்கு ஆளாக நேரலாம் கவனம் வேண்டும். பங்குதாரர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய அனுபவங்கள் ஏற்படும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் வெறுப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் மற்றவர்கள் உதவி நாடி வர வாய்ப்புகள் உண்டு. எவரிடமும் வளைந்து போகாதீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....