இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு

Date:

இத்தாலியில் தலைநகர் ரோமுக்கு அடுத்தபடியான பெரிய நகரமாக மிலன் விளங்குகிறது. இங்கு முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் சுமார் 200 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு தங்களது அறைகளில் முதியவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இந்த இல்லத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையறிந்த முதியவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சிலர் தங்களது சக்கர நாற்காலிகளில் வேகமாக கீழே இறங்கினர்.

ஆனால் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதனை பொருட்படுத்தாது மீட்பு படையினர் வேகமாக களமிறங்கினர். எனினும் இந்த தீ விபத்தில் 6 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் நெரிசலில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....