யாழில் முதியவரை கடத்திய பெண்ணை தேடி காவல் துறை

Date:

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில், கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்காக முதியவரை கடத்திய சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான காணியை அப்பகுதியை சேர்ந்த பிரிதொரு பெண்ணுக்கு விற்பனை செய்வதற்காக முன்பணமாக 15 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த முதியவர் நீண்டகாலமாக காணியை விற்பனை செய்யவில்லை என்பதோடு பணத்தை மீளக்கொடுப்பதற்கும் தாமதப்போக்கினை கடைபிடித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்தப் பெண், ஆண்கள் நால்வரின் உதவியுடன் முதியவரை சிற்றூந்தில் கடத்தி அச்சுறுத்தியதோடு தாக்கியும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முதியவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட ஐவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....