பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் 2 வாரத்தில் 86 பேர் உயிரிழப்பு;

Date:

பாகிஸ்தானில் பருவகாலத்தில் பெய்ய கூடிய மழை பொழிவு காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிக்கட்டிகள் உருகுதல் போன்றவற்றால், அதிக வெள்ளமும் ஏற்படுகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தும், 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஏ.ஆர்.ஒய். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் 25-ம் திகதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்தும், 151 பேர் காயமடைந்தும் உள்ளனர் என அதுபற்றிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) தெரிவித்து உள்ளது.

அவர்களில் 16 பேர் பெண்கள் மற்றும் 37 பேர் குழந்தைகள் ஆவர். நாடு முழுவதும் தொடர் மழையால், 97 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இவற்றில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையாக 52 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 20 பேரும், பலூசிஸ்தானில் 6 பேரும் உயிரிழந்து உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானில் நடப்பு 2023-ம் ஆண்டில் 72 சதவீத வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கடந்த ஏப்ரலில் தேசிய பேரிடர் மேலாண் கழகம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.

கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பில் பாகிஸ்தான் சிக்கியது போன்று, நடப்பு ஆண்டிலும் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அது பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் கொண்டு சென்று விடும் என்று என்.டி.எம்.ஏ. கழகத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இனாம் ஹைதர் கூறியுள்ளார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....