காடப்புறா கலைக்குழு

Date:

கிராமிய இசையில் ஆர்வமிக்க முனீஸ்காந்த் கலைக்குழு நடத்தி வருகிறார். கலை மீது உள்ள ஆர்வத்தால் கல்யாணம் பற்றிய யோசனையே இல்லாமல் காலம் கடந்து விடுகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ளூர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பதவியில் இருக்கும் ஊர் தலைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நேர்மையான இளம் தலைவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கிறார் முனீஸ்காந்த். அதனால் ஊர் தலைவரின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார். உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

முடிவில் முனீஸ்காந்த்தின் திருமணம் நடந்ததா, கொலை முயற்சியிலிருந்து தப்பித்தாரா என்பது மீதி கதை. முனீஸ்காந்த்துக்கு படம் முழுவதும் வரக்கூடிய நாயகன் வேடம். படத்தின் மொத்தப் பாரத்தையும் அவர் தோள் மீதுதான் இறக்கி வைத்துள்ளார்கள். அதை அவரும் இயல்பான நடிப்பால் மிக சாதாரணமாக கடந்து போவது அருமை.

குழந்தைகளுடன் விளையாடுவது, ஆதரவற்றவர்களை தாயுள்ளத்தோடு அரவணைப்பது என படம் முழுவதும் சினிமாத்தனம் இல்லாமல் வாழ்ந்துள்ளார். சீரியசான இடங்களையும் தன்னுடைய சிரிப்பால் நகர்த்திச் செல்வது சிறப்பு.

நண்பராக வரும் காளிவெங்கட் முகத்திலும் யதார்த்தம் விளையாடுகிறது. மகளின் மருத்துவ தேவைக்காக மனதுருகும் இடம் நெகிழ்ச்சி. திண்ணையில் உட்கார்ந்து காலத்தைக் கழிக்கும் ஸ்ரீலேகா ராஜேந்திரன், வில்லனாக வரும் மைம் கோபி, பாடகராக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஹரிகிருஷ்ணன், ஸ்வாதிமுத்து, ஆத்தங்குடி இளையராஜா என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள்.

கிராமத்தின் அழகையும், வெள்ளந்தியான மனிதர்களையும் மிக அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி. பாடல்கள் அனைத்தும் கதையுடன் பயணிக்கும்படி இசையமைத்துள்ளார் ஹென்றி, பின்னணி இசையிலும் நிறைவு மேற்கத்திய இசை வரவால் நாட்டுப்புற கலைகள் அழியும் நிலையிலும் அதையே நம்பி வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் கவலைக்குரியதாக மாறியுள்ளதை வாழ்வியல் சார்ந்த கதையாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ராஜா குருசாமி. கலை, பண்பாட்டின் உயர்வையும், தொன்மையையும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....