சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மாவீரன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, படம் குறித்த புதிய தகவல் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி, புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, மாவீரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியில் குரல் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.
படத்தின் டிரெய்லரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேல்நோக்கி பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது மேலிருந்து விஜய் சேதுபதி பேசுவதாக வீடியோ ஒன்றை தனது டுவீட்டரில் வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை குறிப்பிட்டு “மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
– Sivakarthikeyan#Maaveeran#VeerameJeyam #MaaveeranFromJuly14th pic.twitter.com/Nobb7HOIhC— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 11, 2023




