உர மூட்டையின் விலை அதிரடியாக குறைப்பு

Date:

50 கிலோ கிராம் எம்.ஓ.பி உர மூட்டையின் ஒன்றின் விலை நாளை (15) முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பருவத்தின் ஆரம்பத்தில் 22,000 ரூபாவாக இருந்த MOP உரத்தின் விலை 19,500 ரூபாவாக அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டது.

 

அத்துடன், யாழ் பருவத்தின் ஆரம்பத்தில் உரத்தின் விலையை மேலும் 4500 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, விவசாய சேவை நிலையங்களினால் தற்போது தலா 15,000 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.ஓ.பி உரத்தின் விலை நாளை (15) முதல் 14,000 ரூபாவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

 

நாளை முதல் விவசாய சேவை நிலையங்களில் உரத்தை புதிய விலையில் பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....