தெமோதரை பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது!

Date:

சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தெமோதரை பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில், காயமடைந்த 21 பேர் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்களில், 8 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பாரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 பேர் அடங்கிய வைத்தியர்கள் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....