ஆசிய ‘வூசு’ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மலையக இளைஞன்

Date:

ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் இலங்கையை சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில், பங்குகொண்டே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்துக்குற்பட்ட கம்பளை பகுதியை சேர்ந்த கணேசன் சுதாகரன் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இலங்கைகக்கும் , மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்த சுதாகரனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கணேசன் சுதாகரனை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அவருக்கான ஆசிர்வாத பூஜையொன்று நாளை முற்பகல் 10 மணிக்கு கம்பளை அம்மன் கோவிலில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர், அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புவனேகபா பாதையில் உள்ள அவரின் இல்லம் வரை சுதாகரன் பேரணியாக அழைத்து செல்லப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....