பேராதனை பெண் மரணம் விசாரணை அறிக்கை நாளை சுகாதார அமைச்சருக்கு

Date:

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயிற்று வலி காரணமாக அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிந்த 21 வயதான யுவதி, குறித்த வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த குழு நேற்றைய தினம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தது.

இவ்வாறான பின்னணியில், கண்டி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளர்களுக்கு, உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட செஃப்ட்ரோஎக்சோன் எனப்படும் நோய்யெதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டதை அடுத்து ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த மருந்தை பயன்பாட்டில் இருந்து, இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....