யாருடைய கொடி உயரம் என்பதில் போட்டி

Date:

ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமானநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கும். இந்தியாவின் சுதந்திர தின விழாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் எனலாம். இந்தநிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது நாட்டில் நிலவும் கடனைப் பொருட்படுத்தாமல், அதன் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் திகதி அன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவை போன்றே பாகிஸ்தானும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட சில ஆடம்பரமான திட்டங்களை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் கொண்டாட்டங்கள் மூலம் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிக்கும் பாகிஸ்தான், சுதந்திர தினத்தன்று 500 அடி உயரத்திற்கு தேசியக் கொடியை ஏற்றிவைக்க முடிவு செய்துள்ளது, அதன் மதிப்பு பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.40 கோடி. இந்த கொடி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று லிபர்ட்டி சவுக்கில் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....