சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி!

Date:

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய இனம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பேருந்துகளுக்கான அனுமதிபத்திரம் வழங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் தொடர்புடைய அதிகாரி ஒருவர் பற்றி கருத்துரைக்க முற்பட்ட போது, அவர் மீது இருவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாணக்கியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காவல்துறையினரின் உதவியுடன்,சாணக்கியன் இராசமாணிக்கம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களை சோதனை செய்திருந்தார்.

இதேவேளை, அண்மையில் மன்னம்பிட்டியவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்திருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....