இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
காலியில் இடம்பெறும் இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சஹீன் ஷா அப்ரிடி 86 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் (45 ஓவர்கள் நிறைவில்) 05 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில், பாகிஸ்தான் அணியின் சவுத் ஷகீல் (Saud Shakeel ) 69 ஓட்டங்களுடனும், அகா சல்மான் (Agha Salman) 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய 83 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.




