அமெரிக்கா நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சோகம்

Date:

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் அந்த குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். அவர்களில் தந்தை, 4 வயது மகன் மற்றும் பாட்டி தப்பியுள்ளனர். தாயார் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என அப்பர் மேக்பீல்டு நகர காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என தி ஹில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதுதவிர, அந்த குடும்பத்தின் 2 வயது சிறுமி மற்றும் 9 மாத குழந்தையை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, வெள்ளத்தில் வரிசையாக சாலையில் நின்ற 11 கார்களில் 3 கார்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இவர்களில் 10 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....