போலந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி

Date:

போலந்து நாட்டின் போஸ்னான் நகரின் புனித மார்ட்டின் தெருவில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இது அதிக சுற்றுலாப் பயணிகள் குவியும் இடமாகும். இந்த ஓட்டலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மர்ம நபர் ஒருவரால் போஸ்னான் நகரைச் சேர்ந்த 2 பேர் சுடப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் தரப்பில் இச்சம்பவத்திற்கு ஒருவர் தான் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? அவருக்கும், இறந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் அங்குள்ள ஊடகங்களில் வெளியான தகவலில், ஒருவர் மற்றொருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....