நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்!

Date:

நிலாவெளி – கோபாலபுரம் பகுதியில் கடற்கரைக்கு சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – நெலுக்குளம் பகுதியில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்திருந்த குழுவினரில் இருந்த மாணவர்களே இவ்வாறு, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

12, 10, 14 மற்றும் 9 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்னர்.

பொலிஸ் உயிர்காப்புப் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பொலிஸ் உயிர்காக்கும் படையினர் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ​​மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு உடனடியாக கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....