மாலைத்தீவில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்த்

Date:

நடிகர் ரஜினிகாந்த் மாலைத்தீவு கடற்கரையில் ஓய்வாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது ஒற்றைப் பாடலான ‘Hukum’ நேற்று (17) வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்துவந்தார்.

அந்தப் படத்தில் அவருக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

தொடர் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையடுத்து சிறிய இடைவேளைக்காக நடிகர் ரஜினிகாந்த் இலங்கை ஊடாக மாலைத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு கடற்கரையில் அவர் ஓய்வாக நடந்து சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இயக்குநர் ஞானவேல் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....