ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த அதிரடி தடை!

Date:

அரசத்துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது.

 

இன்று முதல் அரசாங்க அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என ரஷ்ய வர்த்தக துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஷ்யாவின் தொலை தொடர்பு, அரசாங்க ஊடகத்துறை என அரசாங்க துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரச அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

அரச பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்து இருக்கிறது.

 

இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....