இத்தாலியில் தண்ணீர் பஞ்சம் – சுற்றுலா பயணிகள் அவதி

Date:

புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மன், போலாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக அண்மையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புகள் உள்ளவர்களை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் தற்போது 46 டிகிரி வெயில் வாட்டி எடுத்து வருவதால் அங்கு அதீத வெப்ப அலை வீசுகிறது. தலைநகர் ரோமில் வீசி வரும் அனல் காற்று காரணமாக அந்நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் கையில் குடையுனும், தலையில் தொப்பியுடனும் சுற்றி வருகின்றனர்.வெயிலின் தாக்கத்தால் அங்கு தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக ரோம் நகரில் குடிநீர் கேன்களின் விலை அதிகரித்துள்ளது. அந்நகரில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்களில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....