பேரே வாவியிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Date:

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிற்றம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பேரே வாவியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், உயிரிழந்தவர் 45 மற்றும் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்தவர் 05 அடி 03 அங்குல உயரம் கொண்ட ஆண் எனவும், வெளிர் நீல நிற அரை கை , செக் சட்டை மற்றும் நீல நிற நீளமான பொட்ஹம் காற்கட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

 

கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....