கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்

Date:

கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சியானது காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

 

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.

அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் “இது எங்களுடைய சொந்த காணி. இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரியால் தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில், காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு செல்வன் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை வடமராட்சி கிழக்கில் இன்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவீகரிக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....