அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான புதிய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய (24) கொள்முதல் விலை 321.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 334.55 ரூபாவாக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய சில நாடுகளின் நாணய மாற்று விகிதம் மேல் உள்ள படத்தில் காணலாம்.