மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை

Date:

மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை 8 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் ஜூன் 30 வரையிலான 6 மாத காலப்பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட 3 பெண்கள் ஒரு ஆண் உட்பட 4 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்கள் 14 பெண்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும், மட்டக்களப்பு பொலிஸ் பரிவில் 10 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும், தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை முதலாம் திகதி தொடக்கம் நேற்று 29 ம் திகதி வரையிலான காலப்பகுதில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 18 வயதுக்கு உட்பட்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 113 ஆண்களும் 20 பெண்கள் உட்பட ஒருவருடத்தில் 133 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே, கடந்த 2022ம் ஆண்டின் புள்ளி விபரத்தையும் இந்த ஆண்டு 6 மாத புள்ளி விபரத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 6 மாதத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....