வரலாறு காணாத வெப்பம் – ஈரானில் பொது விடுமுறை

Date:

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இது குறித்து அரசாங்க ஊடகப் பேச்சாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி தெரிவிக்கையில்

‘புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....