உமாரா மன்னிப்பு கோரினார்

Date:

லங்கா பிரீமியர் லீக் 2023 இன் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாக பாடகி உமாரா சிங்கவன்ச தெரிவித்துள்ளார்.

அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் தேசிய கீதத்தை பாடும் போது சில உச்சரிப்புக்களின் விதம் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் எனது அவதானத்திற்கு வந்தது.

தேசிய கீதத்தை திரபுப்படுத்தவோ அல்லது தவறான அர்த்தங்களை வழங்கவோ நான் எப்போதும் நினைத்தில்லை

நான் தாய் நாட்டை நேசிப்பவர், நாட்டின் அபிமானத்தை உயர்த்தும் வகையிலேயே பாடல்களை பாடுவேன்.

எனினும் தேசிய கீதம் பாடிய விதம் தொடர்பில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளேன்.

எனது பாடலால் யாரேனும் பாதிக்கப்பட்டு மனம் புண்படுத்தப்பட்டிருந்தால் இதயபூர்வமாகவும், நேர்மையாகவும் மன்னிப்பு கோருகிறேன் என்று பாடகி உமாரா சிங்கவன்ச தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....