மீண்டும் வேட்டை மன்னன் படத்தை கையில் எடுக்கும் நெல்சன்

Date:

2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷோகேஸ் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று.
இந்நிலையில் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் கையில் எடுக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு வேட்டை மன்னன் படத்தின் பணிகளில் நெல்சன் இறங்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....