சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ( 57) மொனராகலை பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்..

 

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர், மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

 

இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக உள்ள நிலையில், அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....