ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தனக்கான காட்சியை நடிகர் விஷ்ணு விஷால் நிறைவு செய்துள்ளார். இதனை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
And its a wrap for me for #LalSalaam
What a journey this has been…
Emotional and overwhelmed..
Learnt so much..
Thanks to my director @ash_rajinikanth and @LycaProductions for this memorable journey❤️❤️ pic.twitter.com/lARO6zKe0w— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 5, 2023




