ஜப்னா கிங்ஸை வீழ்த்தியது தம்புள்ளை

Date:

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் தம்புள்ளை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் பெரேரா 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அந்த வகையில் தம்புள்ளை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....