மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி

Date:

ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

 

இதையடுத்து தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அல்லது நாளை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....