தென் சீனக்கடல் விவகாரம் – சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்

Date:

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக தென் சீனக்கடல் விளங்குகிறது.

 

இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

 

சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் தீவு, பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

 

எனவே இங்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றது. இந்த படகை சீன இராணுவ கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தினர்.

 

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கண்டனத்தை தெரிவித்தன. மேலும் தென் சீனக்கடல் குறித்த ஒப்பந்தத்தை அமெரிக்கா புதுப்பித்தது.

 

அதன்படி பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடலில் தாக்குதல் நடத்தினால் கூட்டாளி நாடுகளை பாதுகாக்க வேண்டும். ஆனால் ஆசிய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை சீனா எச்சரித்தது.

 

இந்தநிலையில் சீன தூதர் {ஹவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....