100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்காக நியூசிலாந்து புதிய திட்டம்

Date:

காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

அதனை குறைப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார்.

இதன் மூலம் காற்று, பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்.

மேலும் அன்னிய முதலீடு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும். எனவே இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எரிசக்தித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....