அதிவேகத்தால் நடந்துள்ள அனர்த்தம்

Date:

பண்டாரகம கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மில்லனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் ஆசிரியை ஒருவருமே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பயணித்த லொறி முந்திச் செல்ல முற்பட்ட வேளை, இரண்டு மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது.

இதன்போது கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் மற்றும் ஆசிரியையும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....