ரிஷப் பண்ட்தான் கேப்டன்: டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Date:

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். 26 வயதான இவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்து சுமார் 14 மாதங்களுக்குப் பின் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டின் தேசிய அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

இதனால் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியானது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரிஷப் பண்ட் காயம் காரணமாக 2023 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சேர்மனும், இணை-உரிமையாளருமான பார்த் ஜிண்டால் கூறுகையில் “ரிஷப் பண்ட்-ஐ எங்கள் அணியின் கேப்டனாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய ஆர்வத்தொடு, உற்சாகத்துடன் 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எங்கள் அணியுடன் வருவதை பார்க்க காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...