16 ஆண்டுக்கால சோகத்தை தீர்க்குமா ஆர்சிபி? 2 புள்ளிகளை தட்டி தூக்குவாரா தோனி

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17வது சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், பலம் வாய்ந்த ஆர்சிபி அணியும் எதிர்கொள்கிறது. முதல் போட்டியிலே தோனியும், விராட் கோலியும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கான விக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனிலும் இந்த போட்டி பெரிய அளவிலான பார்வையாளர்களால் பார்க்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளும், எத்தனை முறை ஐபிஎல் தொடரில் மோதி வெற்றி பெற்று இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இதுவரை சிஎஸ்கேவும், ஆர் சி பி அணியும் 31 முறை மோதி இருக்கிறார்கள். அதில் சிஎஸ்கே அணி 20 போட்டிகளிலும், ஆர்சிபி அணி 10 போட்டிகளிலும் ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. ஆர் சி பி அணிக்கு ஒரு தீராத குறை இருக்கிறது. அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி கடைசியாக வெற்றி பெற்று 16 ஆண்டுகள் ஆகிறது.

கடைசியாக 2008 ஆம் ஆண்டு லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி 126 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே அணி 112 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆர் சி பி அணி கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்ற போது பெட்ரோல் விலை இந்தியாவில் வெறும் 48 ரூபாய் தான் இருந்தது. அதேபோல் தங்கம் விலை ஒரு சவரன் 8,500 ரூபாய்க்கு விற்றது.

அது மட்டுமில்லாமல் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் கொடிக்கட்டி பறக்கும் விராட் கோலி அப்போது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த சோகத்தை விராட் கோலி மாற்றுவாரா என்பது தான் தற்போது பெங்களூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆர் சி பி மகளிர் அணி தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் விராட் கோலி தலைமையிலான அணி சிஎஸ்கேவை வெல்ல வேண்டும் என்று உத்வேகத்தில் இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 999 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தோனி 751 ரன்களும் ,சுரேஷ் ரெய்னா 710 ரன்களும் எடுத்துள்ளார்கள். இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஜடேஜா 18 விக்கெட்டுகளும், பிராவோ 17 விக்கெட்களும், ஆல்பி மார்க்கல் 16 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...