# Tags

இங்கிலாந்தில் ‘டிக்டொக்’ செயலிக்கு தடை!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விமானத்துடன் மோதிய ரஷ்ய போர் விமானம்

கருங்கடலுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றுடன் ரஷ்ய போர் விமானமொன்று மோதியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நேரடி மோதல் தோற்றம் பெறுவதற்கான அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச வான் பரப்பில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு ரஷ்ய போர் விமானங்கள் அதனை இடைமறிக்க முற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சூழ்ச்சியொன்றின் மூலமே குறித்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக கூறும் ரஷ்யா, […]

தாய்வானை இணைக்க சீனா அழுத்தம் தரும் - அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வான் நாட்டை இணைக்க சீனா அழுத்தம் தரும் – அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தாய்வானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த […]

உக்ரைன்-ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்த அவர், […]

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய இராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் ஜான் கிர்பி, புதிய இராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை […]

அமெரிக்க அரச துறை சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து துறைசார்ந்த சாதனங்களில் TikTok செயலியை தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய அரசு துறைகளின் சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், […]

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது. இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகின்ற நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இராணுவ வீரர்கள் யாருக்கும் […]

அமெரிக்காவில் விமான விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி-!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளது. விமானத்தில் விமானி, வைத்தியர், தாதியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் […]