# Tags

உலக சாதனை படைத்த ரொனால்டோ!

17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கின்றது.   போட்டியை நடத்தும் நாடான ஜெர்மன் தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்கு தகுதி காணும்.ஐரோப்பிய கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் பல்வேறு நாடுகளில் தொடங்கியது.   இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 7 பிரிவுகளில் தலா 5 அணிகளும், 3 […]

இங்கிலாந்தில் ‘டிக்டொக்’ செயலிக்கு தடை!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பங்காளதேஷ் அணி!

பங்காளதேஷிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான T20 தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் மற்றும் 2வது T20 போட்டியில் பங்காளதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி T20 போட்டி […]

சாதனை படைத்த இந்திய அணி !

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர் இதன்மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற […]

பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக கந்தையா கஜன் நியமனம்.

இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (பெப். 28) வழங்கி வைத்தார். வடக்கு கிழக்கில் முதலீடுகளை முன்னெடுத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது திறன்களை வெளிப்படுத்தி […]

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது குறித்து மெத்வதேவ் தெரிவிக்கையில், ‘இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக […]