# Tags

லிஸ்டீரியா தொற்று பரவும் அபாயம் இல்லை: சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் லிஸ்டீரியா ( Listeria – Listeriosis)தொற்று பரவும் அபாயம் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்டீரியா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அண்மையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் உயிரிழந்ததையடுத்து, சுகாதார திணைக்களம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இரத்தினபுரி மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் […]

அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி மாயம்!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்பு துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளார். சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் குறித்த துப்பாக்கியை பையில் வைத்து பலாங்கொடையில் உள்ள அகில சாலிய எல்லாவலவின் இல்லத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான அறையில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . அவர் பணிக்கு திரும்பிய […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் […]