# Tags

அமெரிக்க விமானத்துடன் மோதிய ரஷ்ய போர் விமானம்

கருங்கடலுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றுடன் ரஷ்ய போர் விமானமொன்று மோதியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நேரடி மோதல் தோற்றம் பெறுவதற்கான அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச வான் பரப்பில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு ரஷ்ய போர் விமானங்கள் அதனை இடைமறிக்க முற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சூழ்ச்சியொன்றின் மூலமே குறித்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக கூறும் ரஷ்யா, […]

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது. இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. 11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து […]

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய இராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் ஜான் கிர்பி, புதிய இராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை […]