# Tags

இங்கிலாந்தில் ‘டிக்டொக்’ செயலிக்கு தடை!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அந்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறி 75 பேரிடம் மோசடி செய்துள்ளார். இவரால் பிடிபட்டவர்கள் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 22 இலட்சம் ரூபா வரையில் பணம் கொடுத்துள்ளதாகவும், சந்தேக நபர் கனடாவில் வேலை பெற்றுத் தருமாறு ஒருவரிடம் 33 இலட்சம் ரூபா பணத்தை கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபருடன் […]

அமெரிக்க அரச துறை சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து துறைசார்ந்த சாதனங்களில் TikTok செயலியை தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய அரசு துறைகளின் சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், […]

அரச சாதனங்களில் TikTok செயலிக்கு தடை

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களிலிருந்தும் சீன செயலியான TikTok செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது. TikTok செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக TikTok செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.