# Tags

மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சைக்கு அனுமதிக்க மறுத்தமை

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பருவத்தேர்வு தொழில்நுட்ப பாட பரீடசைக்கான விடைகளை எழுதும் முன்னர் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி […]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 […]