# Tags

மாணவிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர்

அத்தனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் தர மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை நாட்களில் குறித்த மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியமையும் […]

இலங்கையில் காற்றின் தரம் குறைவு !

கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது. பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

கைத்துப்பாக்கியுடன் பயணித்த நபரொருவர் பொலிஸாரால் கைது!

கைத்துப்பாக்கியை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளிலில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சந்தேகத்தின் பேரில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தை சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இவரைக் கைது செய்தார். சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் கம்பஹா யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.