# Tags

பூமியை நெருங்கும் பேராபத்து !

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த விண்கல் உள்ளது. அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14-ம் திகதி குறித்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது. இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களும் பூமிக்குத் […]