Home Blog Page 30

சுசீந்திரம் தாணுமாலயசாமி ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.

ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

பரபரப்பான போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா
இந்தியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

9 வது பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர்!

9 வது பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33 வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று (07) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

விருந்தினர்கள் இன்று மு.ப 09.45 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

அதனைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரியின் மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது பிரதிப் படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும். சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.

இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை 8 ஆம் திகதி மு.ப 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9 வது பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E – Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் இலக்கை 6.5 ஓவரில் கடந்த ஆஸ்திரேலியா

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 24.1 ஓவரில் 86 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 87 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா 6.5 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் – மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு மொஹ்சின் நக்வி கூறினார்.

U19 அரையிறுதி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்டோல்க் 14 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டேவிட் டீகர் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் உடன் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக அடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்னிலும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய ஆலிவர் வைட்ஹெட் 22 ரன், திவான் மரைஸ் 3 ரன், ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.

 

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் -குல்கர்னி களமிறங்கினர். முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த முசீர் கான் 4 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து குல்கர்னி – முசீர் கான் ஜோடி நிதானமாக விளையாடியது. குல்கர்னி முதல் ரன் எடுப்பதற்கு 8 பந்துகளும் முசீர் கான் முதல் ரன் எடுப்பதற்கு 6 பந்துகளும் தேவைப்பட்டது. நிதானமாக விளையாடிய குல்கர்னி 30 பந்துகள் சந்தித்து 12 எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரியன்ஷு மோலியா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

இன்று இந்த ராசிகளுக்கு வருமாம் அதிகரிக்கும்… அதிஷ்ட ராசிகள் யார்?

மேஷம்: இன்றைய நாள் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எந்தவொரு கடினமான பணியையும் உங்கள் சொந்த உழைப்பால் தீர்க்க முடியும்.

ரிஷபம்: இன்று யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இந்த நேரத்தில் வியாபார நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை.

மிதுனம்: பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கூடுதல் பணிகளும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.

கடகம்: இன்று யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. உங்கள் சொந்த முடிவை முதலில் வையுங்கள். வேலை செய்பவர் ரூபாய் பரிவர்த்தனையை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.

சிம்மம்: உங்கள் தனிப்பட்ட விஷயங்களை வெளியிட வேண்டாம். எந்த ஒரு செயலையும் ரகசியமாகச் செய்தாலே வெற்றி கிடைக்கும்.

கன்னி: கடந்த சில நாட்களாக நடந்து வந்த காரியங்களில் இருந்த தடைகள் இன்று எளிதில் தீரும். எதிர்மறையான செயல்பாடு உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

துலாம்: சில சமயங்களில் சுயநலம் உறவில் சிக்கலுக்கு வழிவகுக்கும். இந்த குணங்களை நீங்கள் நேர்மறையான வழியில் பயன்படுத்தினால், நீங்கள் நிச்சயமாக சரியான முடிவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்கள் முழு கவனமும் முதலீடு தொடர்பான நடவடிக்கைகளில் இருக்கும். நடைமுறைக்கு அதிகமாக இருப்பது உறவை சிதைத்துவிடும்.

தனுசு: நீங்கள் ஒரு சொத்தை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று தொடங்குவதற்கான சரியான நேரம். உங்களின் முழு கவனம் வணிக நடவடிக்கைகளில் இருக்கும்.

மகரம்: சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு விரைவில் சரியான பலன் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

கும்பம்: சில நேரங்களில் நீங்கள் வேலையில் சில சிரமங்களால் தொந்தரவு செய்யப்படுவீர்கள். இன்று வணிக நடவடிக்கைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை.

மீனம்: பல விஷயங்கள் தவறாக போகலாம். வருமான வழிகள் குறையலாம். வியாபாரத்தில் சில விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் 770 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 770 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 567 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 203 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 06 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதுடன், 2 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 5,416 கஞ்சா செடிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கட்டாய உடலுறவில் ஈடுபட்ட சித்தப்பா

திருத்தணி அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கட்டாய திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய உறவினரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூலி வேலை செய்து வருபவர் கருப்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மகளுக்கு 17 வயதாகும் நிலையில். திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் 17 வயது இளம்பெண் காணவில்லை என்று அந்தப் பெண்ணின் தாய் திருத்தணி காவல் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை பதிவு செய்து கொண்டு இளம் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அந்த இளம் பெண் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி அந்த பகுதியில் சென்று அந்த இளம் பெண்ணுடன் இருந்த வாலிபரையும் பிடித்து வந்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த(17) வயது இளம்பெண் போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது,

திருத்தணி அருகில் உள்ள வி.கே.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (29) என்ற வாலிபர் வாலிபர் 17 வயது இளம் பெண்ணிற்கு சித்தப்பா முறை வருவதாகவும், இளம்பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு 17 வயது இளம்பெண்ணும் காதலிப்பதாக கூறியதால் இருவரும் பள்ளிப்பட்டு வட்டம் கரிபேடு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து இருந்ததாகவும்,

அப்போது தன்னிடம் பாலாஜி வலுக்கட்டாயமாக பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் இதனால் தான் 5- மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் 17 வயது இளம்பெண் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணை கடத்திச் சென்று ஏமாற்றி மிரட்டி உடலுறவு வைத்துக்கொண்டு கர்ப்பம் ஆக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட பாலாஜி மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.