Home Blog Page 32

தனது கடைசி போட்டியில் விளையாடும் வார்னர்..இனி இவர் தான் தொடக்க வீரர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டெஸ்டில் ஓய்வு அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக கேமரூன் கிரீனை தொடக்க வீரராக களமிறக்க ஆலோசிப்பதாக அவுஸ்திரேலிய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3ஆம் திகதி நடக்கிறது.

இது தான் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். அதன் பின்னர் அவரது இடத்தில் (தொடக்க வீரர்) யாரை இனி களமிறக்குவது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஆன்ட்ரு மெக்டொனால்டு (Andrew McDonald) தொடக்க வீரராக கேமரூன் கிரீனை களமிறக்க ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘வார்னர் ஒன்றும் தேர்வாளர் கிடையாது, முன்பு அவர் தொடக்க வரிசைக்கு மேட் ரென்ஷாவை கூறியது நினைவிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் பரிசீலிப்போம்.

தற்போது அவுஸ்திரேலியாவின் சிறந்த 6 பேட்டர்கள் என்ற விவாதத்தில் கேமரூன் கிரீனும் இருக்கிறார். எனவே அவரை தொடக்க வீரர் வரிசைக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.

மார்கஸ் ஹாரிஸ், மேட் ரென்ஷா, கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரும் வாய்ப்பில் உள்ளனர். இதில் யாருக்கு இடம் என்பது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை அறிவிக்கும்போது தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

 

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டும், சவுத்தி, மில்னே, பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது..

தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.

சாண்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி!

கணவரின் கை கால்களை சங்கிலியால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார்.

நினைத்தாலே பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசியுள்ளார்.

இதனால் கணவின் ஆணுறுப்பு, கழிவறை தொட்டிக்குள் உள்ளே சென்று விட்டது.

இதன்பின்னர் மனைவி நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று , அங்கு தான் செய்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக வீசினீர்கள் என்று காவல்துறையினர் கேட்டதற்கு, அதனை மீண்டும் சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து விட முடியும்.

இதனை தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரபரப்பான போட்டி.. 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத் தொடர்ந்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு யாஸ்திகா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 14 மற்றும் 34 ரன்களை எடுத்து சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி கடைசி ஓவரில் எட்டி விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சதர்லாந்து மூன்று விக்கெட்டுகளையும், ஜார்ஜியா வார்ஹெம் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லி கார்ட்னர், டார்சி பிரவுன் மற்றும் அலானா கிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- வெளியேறியவர்கள் இவர்தானா?

விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் கான்செப்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.

7வது சீசன் படு பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத விறுவிறுப்பின் உச்சமாக இந்த பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டு வீடு, டபுள் டபுள் எவிக்ஷன் என ஏகப்பட்ட புது விஷயங்கள் நடந்தன.

நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, ஆனால் இந்த 7வது சீசனின் வெற்றியாளராக யார் வருவார் என்பது ரசிகர்களால் இன்னும் கணிக்கவே முடியவில்லை.

இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ரவீனா வெளியேறியுள்ளார் என ஏற்கெனவே தகவல் வர இப்போது இன்னொரு எவிக்ஷன் நடந்ததாக கூறப்படுகிறது.

ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக குணச்சித்திர நடிகை ஒருவர் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். இதோ அவரது டுவிட்டர் பதிவு,

 

நீர் கட்டணம் அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்புக்கு ஏற்ப ஜனவரி மாதம் முதல் நீர் கட்டணம் 3% அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு?

ஜனவரி முதல் VAT வரி அதிகரிக்கப்படவுள்ளதன் காரணமாக, போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக பாடசாலை மற்றும் பொது போக்குவரத்து சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

VAT வரி திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

சுமார் 1000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார். VAT திருத்தத்தைத் தொடர்ந்து எரிபொருள் விலை 30 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணத்தை அதிகரிப்பது வாடிக்கையாளர்களுக்கு அநீதியான அதே வேளையில், VAT அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

 

நேருக்குநேர் மோதும் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதில் அயலான் படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படமும் ஜனவரி 12ம் தேதி தான் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கூடுதலாக கேப்டன் மில்லர் படத்திற்கு சென்சாரில் யு/ஏ அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் அயலான், கேப்டன் மில்லர் இரு படமும் ஒரே தேதியில் மோதுகிறது.

இருபது – 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

20-20 போட்டிகளுக்கான இருபத்தி இரண்டு பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

20-20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை 20-20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பானுக ராஜபக்ஷ, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் 20-20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 20-20 தொடருக்கான இலங்கை அணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்க
சரித அசலங்க
பெதும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
தசுன் ஷானக
ஏஞ்சலோ மேத்யூஸ்
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
நுவன் துஷார
குசல் ஜனித்
பானுக ராஜபக்ஷ
கமிந்து மெண்டிஸ்
மதீஷ பத்திரன
துனித் வெள்ளாலகே
அகில தனஞ்சய
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
தில்ஷான் மதுஷங்க மற்றும்
துஷ்மந்த சமிர

கொரோனா தொற்றால் மேலுமொருவர் உயிரிழப்பு

2AP1TD2 Coronavirus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.