Home Blog Page 4

டோனி நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவதை பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள் ஆனால்… – ஸ்டீபன் பிளெமிங்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், “டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது”

அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ஸ்கோரை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினா். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத டிராவிஸ் ஹெட் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை நடத்தினர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசியது.

3-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று பந்துகளை டிராவிஸ் ஹெட் பவுண்டரிக்கு விரட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 50 ரன்னைக் கடந்தது. 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கி 16 பந்தில் அரைசதம் அடித்தார் டிராவிஸ் ஹெட். 3-வது ஓவரில் 22 ரன்கள் கிடைக்க அந்த அணியின் ஸ்கோர் 62 ஆனது.

4-வது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச 21 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச அணியின் ஸ்கோர் 100 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 22 ரன்கள் கிடைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக (ஐந்து ஓவர்களில்) சதம் அடித்த அணி என்ற சாதனையையும், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

 

ஐ.பி.எல். 2024 – டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மிரட்டல்.. 266 ரன்களை குவித்தது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்தது.

பவர்பிளே முடிந்த கையொடு அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

சேப்பாக்கத்தில் “டோனி” என ஆர்ப்பரித்த சத்தத்தை எங்கும் கேட்டதில்லை: மிட்செல் ஸ்டார்க்

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனால் டோனி களம் இறங்கும்போதெல்லாம் ரசிகர்கள் டோனி… டோனி… என ஆர்ப்பரிக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் டோனி… டோனி… என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ். டோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் டோனி டோனி என ஆர்ப்ரித்த சத்தம், ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் மேல்போர்ன் மைதானத்தில் கூட இது போன்ற ஆர்ப்பரிப்பை கேட்ட முடியாது. இது மிகவும் வேடிக்கையானது.

இவ்வாறு ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ். டோனி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடைசி ஓவரில் ரன்கள் விளாசுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

 

எம்.எஸ். டோனி எங்கள் நாட்டிற்காக விளையாடினால்… சிஎஸ்கே-வை கிண்டல் செய்த ஐஸ்லாந்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி நேரத்தில் களம் இறங்கி வரும் எம்எஸ் டோனி அபாரமாக விளையாடி வருகிறார். எம்.எஸ். டோனி நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவாரா? என ரசிகர்கள் ஏங்கும் நிலையில், குறைந்தபட்சம் 10 பந்துகளை சந்திக்கும் நிலையில்தான் களம் இறங்குகிறார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசியில் இறங்கி அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கடைசி ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அவர், முதல் மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸ் விளாசினார்.

நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மொத்தமாக 9 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் குவித்தார்.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 90 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அப்போது டோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் களம் இறங்கவில்லை.

இந்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு, டோனியை முன்வரிசையில் களம் இறக்குவதில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தில் “எம்.எஸ். டோனி எங்கள் அணிக்காக விளையாடினால் அவர் போன்ற வீரரை நாங்கள் 8-வது இடத்திற்கு முன்னதாக களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று தோன்று அவர், சிஎஸ்கே அணியில் அவரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

 

ஐ.பி.எல். 2024 – லக்னோ வெற்றி பெற 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 24 பந்துகளில் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் தூபே மற்றும் சமீர் ரிஸ்வி முறையே 3 மற்றும் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக சென்னை அணி 90 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரனகளை குவித்தார். இதன் மூலம் சென்னை அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய குருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய் மற்றும் மொசின் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

சிங்கம் சூர்யா போல Charge எடுத்த ரோகித்- கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த நேரத்தில் ஷஷாங்க் சிங்- அசுதோஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தது. ஷஷாங்க் சிங் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 15 ஓவரில் 141 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த நிலையில் 16-வது ஓவரை மும்பை அணியின் மத்வால் வீசினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 3 சிக்சர் உள்பட 24 ரன்கள் குவித்தது. இதனால் 16-வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 165 ரன்கள் குவித்தது. இதனால் 24 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அப்போது டைம் அவுட் கேட்கப்பட்டது. டைம் அவுட் முடிந்த நிலையில் இருந்து ரோகித் சர்மா பீல்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் ஆலோசனை நடத்துவது என கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சிங்கம் படத்தில் சூர்யா charge எடுப்பது போல ரோகித் சர்மா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிப்பு

17-வது ஐ.பி.எல். சீசனின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் எடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

ஐ.பி.எல். 2024 – டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, கடைசியாக ஆடிய இரு போட்டிகளில் தோல்வியுற்றது.

அந்த வகையில், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி வெற்றியை தொடரவும், கடைசி இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள லக்னோ அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பிலும் களம் காண்கின்றன.

 

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேமரூன் நூரி காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார்.

இதில் நூரி 6-7 (4-7) 6-7 (1-7) என்ற செட் கணக்கில் தோற்று, தொடரில் இருந்து வெளியேறினார்.