Home Blog Page 5

நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றமே- பஞ்சாப் கேப்டன் சாம்கரண் கருத்து

ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 9 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

முல்லான்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.

சூர்யகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 18 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், சாம் கரண் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் 183 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன்னில் தோற்றது.

அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), சசாங்சிங் 25 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, கோயட்சி தலா 3 விக்கெட்டும், மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பஞ்சாப் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:-

நாங்கள் நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம்.

இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு சாம்கரண் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாண்ட்யா கூறியதாவது:-

இது ஒரு சிறந்த ஆட்டமாகும். ஒவ்வொரு வீரருக்கும் பதட்டம் ஏற்பட்டது. அசுதோசின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக போராடி இந்த வெற்றியை பெற்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

பேட்ட ரஜினி ஸ்டைலில் டோனி.. வைரலாகும் வீடியோ

17-வது ஐ.பி.எல். சீசனில் இன்று லக்னோவில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி சென்னை வீரர்கள் லக்னோ சென்றடைந்து அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டோனியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் காட்சிகளை மையப்படுத்தி அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

இதனை சிஎஸ்கே தனது இன்ஸ்டெகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஏகனாவுக்கு பேட்ட பராக் என பதிவிட்டிருந்தது.

 

சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை – லக்னோ ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.

சென்னை- லக்னோ மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னை அணிக்கு சவால் அளிக்குமா லக்னோ? இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன் குவித்த சென்னை அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ், ஷிவம் துபேவின் அரைசதமும், யார்க்கர் பந்து வீச்சில் மிரட்டிய பதிரானாவின் 4 விக்கெட்டும் வெற்றிக்கு உதவின. விக்கெட் கீப்பர் டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன் விளாசி கலக்கினார்.

சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மற்றபடி சென்னை அணி எல்லா வகையிலும் வலுவாகவே விளங்குகிறது. லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது. பந்து திடீரென எகிறுவதும், தாழ்ந்து செல்வதும் என்று இரு வித தன்மையுடன் காணப்படுகிறது. அதற்கு ஏற்ப வீரர்கள் ஆட வேண்டியது முக்கியம்.

லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது.

கடைசியாக ஆடிய டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அவர்களின் பேட்டிங் ஒரு சேர ‘கிளிக்’ ஆகாதது தான் பின்னடைவாக உள்ளது. குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யா, யாஷ் தாக்குர் ஓரளவு நன்றாக செயல்படுகிறார்கள். காயத்தில் சிக்கிய ‘புயல்’ வேக பவுலர் மயங்க் யாதவ் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டார். ஆனாலும் அவர் களம் காணுவாரா என்பதில் உறுதி இல்லை. மொத்தத்தில் ஒருங்கிணைந்து விளையாடினால் சென்னை அணிக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடிய லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு பிறந்த நாள் பரிசாக வெற்றிக்கனி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை- லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்றில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ:

குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குருணல் பாண்ட்யா, அர்ஷத் கான் அல்லது தீபக் ஹூடா, மொசின் கான், ரவி பிஷ்னோய், ஷமார் ஜோசப், யாஷ் தாக்குர்.

சென்னை:

ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள தல தோனி

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 6 போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் 34-வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாட இருக்கின்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணி காத்திருக்கின்றது. இந்நிலையில் சென்னை அணியில் உள்ள பேட்டிங் ஆர்டரில் சில சிக்கல்கள் இருப்பதால் தோனி ஒரு முக்கிய முடிவை எடுக்க காத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தற்போதைய சென்னை அணியின் மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மட்டுமே அதிரடியாக விளையாடி வரும் வேளையில் மற்ற வீரர்கள் சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் மிடில் இவர்களில் சி.எஸ்.கே அணியானது ரன் குவிக்க சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக லக்னோ அணிக்கெதிரான போட்டியில் தோனி முன்கூட்டியே களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியில் கடைசி ஓவரின் போது களமிறங்கிய தோனி ஹாட்ரிக் சிக்சருடன் நான்கு பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்து அசத்தினார்.

இவ்வேளையில் அவரது இந்த சிறப்பான பார்ம் காரணமாக அவர் டாப் ஆர்டரில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லக்னோ ஆடுகளம் பேட்டிங்கிற்கு செய்வதற்கு சற்று தொய்வாக இருக்கும் என்பதனாலும் இந்த மாற்றம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று நல்ல உடல் தகுதியுடனும் நல்ல ஹிட்டிங் ஃபார்முடனும் இருக்கும் தோனி டாப் ஆர்டரில் களமிறங்கினால் அது சென்னை அணிக்கு பலத்தை சேர்க்கும் என்பதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தோனி ஐந்தாவது வீரராக களத்திற்கு வந்தால் நிறைய பந்துகளை எதிர்கொள்வார் என்பதால் ரசிகர்களும் தோனி இந்த முடிவினை எடுக்க வேண்டும் என பிராத்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்- இப்படியொரு அதிர்ச்சியான கிளைமேக்ஸா?

விஜய் தொலைக்காட்சியில் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்முறையாக ஜோடி சேர கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் தமிழும் சரஸ்வதியும்.

எஸ்.குமரன் அவர்களின் இயக்கத்தில் தயாராகி வந்த இந்த தொடர் ஆரம்பத்தில் விறுவிறுப்பின் உச்சமாக இருந்தது.

கோதை-சந்திரகலா என இருவரை வைத்து கதை நகர்ந்து வர பாதியில் அர்ஜுனா தமிழா என்று மாறியது. அப்படியே இவர்களை வைத்தே கதை நகர்ந்துகொண்டு வர தற்போது சீரியல் முடிவுக்கும் வந்துள்ளது.

தற்போது கதையில் ஈவு இரக்கம் இல்லாத ஒரு மோசமான கதாபாத்திரமாக காட்டப்பட்டு வருகிறது.

வில்லத்தனத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த அவரது தாயே தற்போது தனது மகனை கொலை செய்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டு அவரது கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறது.

இதுவரை அம்மா சொன்னதை கேட்டு பல தவறுகள் செய்துவந்த அர்ஜுன், தற்போது அம்மாவின் வார்த்தை மீறி குழந்தையை வைத்து தவறுகள் செய்ய துணிந்ததால், அவரை கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார் அர்ஜுனின் அம்மா.

பொதுவாக ஒரு தொடரை முடிக்கிறார்கள் என்றால் இறுதியில் வில்லனை நல்லவராக காட்டுவார்கள், ஆனால் இதில் வில்லனை முடித்துள்ளார்கள், இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் சந்தை ஆராய்ச்சி தளமான “StockGPT” இனை Softlogic Stockbrokers அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் நிதிசார் தொழில்துறையில் இதுவரை காலமும் காணப்பட்ட நிலையை முற்றிலும் வேறுபட்ட விதத்தில் அணுகும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, Softlogic Capital PLC இன் முழு-சேவை தரகுப் பிரிவான Softlogic Stockbrokers பிரிவின் உள்ளக தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்ட StockGPTஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. StockGPT மென்பொருள் தொழில்நுட்பமானது Microsoft Azure OpenAI ஐ சேவை உட்பட அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள், நிதி ஆய்வாளர்கள் மற்றும் நிதி முகாமைத்துவத்தினருக்கு முன்னொறுபோதும் இல்லாத மற்றும் உடனடி அணுகலை வழங்க, நிகழ்நேர, நம்பகமான தகவல்களை வழங்குகிறது. இப்போது www.stockgpt.lk மூலம் அணுகக்கூடிய StockGPT ஆனது கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் நிதித் துறை மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான அறிக்கைகளில் இருந்து நம்பகமான மற்றும் நேரடியாக ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரத்திற்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய தகவல்களையும் இந்த மென்பொருள் ஆராய்கின்றது.

சந்தை ஆராய்ச்சிக்காக பங்குத் தரகு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பதன் சிரமங்கள் மற்றும் அதற்கான தீர்வு பற்றிய ஆராய தூண்டிய வாடிக்கையாளர்களின் கருத்துக்களில் இருந்து இந்த செயல்பாடு உருப்பெற்றது. இது முதலீட்டு முடிவெடுக்கும் வேகம் மற்றும் செயல்திறனை பாதிக்கிறது. ஒரு முதன்மை சவால் தகவல் சீரற்ற நிலை ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரம் மற்றும் வளங்களில் உள்ள வரம்புகள் காரணமாக பகுதியளவான அல்லது தொரிவுசெய்யப்பட்ட நுண்ணறிவுகளை மட்டுமே பெறலாம். எனவே, கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை நேரடியாகப் பெறுவது ஒரு கேம் சேஞ்சர் ஆகும்.

StockGPT ஊடாக Softlogic Stockbrokers இலங்கையின் நிதிச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், StockGPT தகவல் சீரற்ற தன்மை, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாரம்பரிய பங்குத் தரகர் தொடர்புகளில் வரையறுக்கப்பட்ட நுண்ணறிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களை நேரடியாகச் சமாளிக்கிறது. நீங்கள் StockGPT ஐக் கேட்கக்கூடிய சில வகையான கேள்விகள்;

– நிறுவனத்தின் முக்கிய வணிகப் பிரிவுகள் என்ன?

– நிறுவனத்தின் மொத்த நிறுவப்பட்ட கொள்ளளவு என்ன?

– 2022 ஆம் ஆண்டு நிறுவனம் எவ்வளவு தொகையை மீள்ஈட்டுத்தொகையாக செலுத்தியுள்ளது?

– 2023 இல் நிறுவனம் செலுத்திய ஒரு பங்குகளுக்கான பங்குலாபம் எவ்வளவு

– 2022 ஆம் ஆண்டில் சிறப்பான 5 சுற்றுலா சந்தைகள் மூலங்கள் எவை?

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள மேலும் மேம்பாடுகளுடன், தொழிற்துறை பங்கேற்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான முதன்மை அறிவு மையமாக இலங்கையின் மூலதனச் சந்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை இந்த அப்ளிகேஷன் கொண்டுள்ளது.

Softlogic Stockbrokers இன் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திஹான் தெடிகம அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “SockGPT” ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம், இது பாரம்பரிய பங்குத் தரகர் தொடர்புகளை மட்டுமே நம்பி முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு தீர்வாக நாம் மேற்கொண்ட முன்முயற்சி மற்றும் அர்ப்பணிப்பிலிருந்து உருவாகிறது. “SockGPT” மூலம், நாங்கள் சந்தை ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் மிகவும் ஆற்றல்மிக்க, திறமையான மற்றும் உள்ளடக்கிய நிதிச்சார் துறையில் அடித்தளத்தை அமைத்துள்ளோம். இந்த புதுமையான கருவி முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தகவல்களுடன் அவர்களுக்கு மேலதிக மேலாண்மையை அளிக்கிறது, தகவலறிந்த முடிவெடுக்கும் கலாச்சாரத்தை வளர்க்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், நாட்டின் நிதித்துறையின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு Softlogic Stockbrokers கணிசமான பங்களிப்பை வழங்கி, அனைத்து பங்குதாரர்களும், அவர்களின் அளவைப் பொருட்படுத்தாமல், இன்றைய மாறும் முதலீட்டுச் சூழலில் வெற்றிக்குத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறது.

Microsoft OpenAI போன்ற தளத்தைப் பயன்படுத்துவது, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, உலகத் தரம் வாய்ந்த தரவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் நம்பகத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. StockGPT பயனர்கள் நம்பகமான மற்றும் பாதுகாப்பான சந்தை நுண்ணறிவுகளுக்கான தளத்தை நம்புவதை மேலும் உறுதி செய்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் அர்ப்பணிப்பால் வழிநடத்தப்படும் இந்த கண்டுபிடிப்பு, ஒவ்வொரு முதலீட்டாளரும், அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் முதல் புதியவர்கள் வரை, நிதிச் சந்தைகளில் நம்பிக்கையுடனும் விரைவாகவும் செல்லக்கூடிய எதிர்காலத்திற்கான எங்கள் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.

Softlogic Stockbrokers இல் உள்ள எங்களின் உள்ளகக் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அதன் அர்ப்பணிப்பும் நிபுணத்துவமும் எங்களை நவீன தொழில்நுட்பத்தில் முன்னணிக்கு கொண்டு சென்றுள்ளது. சந்தை ஆராய்ச்சியை மாற்றுவதற்கும் முதலீட்டாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் எங்கள் பார்வையைத் தொடர, எங்கள் குழுவின் கூட்டு முயற்சிகள் ஒரு தொலைநோக்கு யோசனையை உறுதியான யதார்த்தமாக மாற்றியுள்ளன. StockGPT என்பது புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உண்மையான உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்கள் திறனுக்கான சான்றாகும். இந்தச் சாதனையானது, எல்லைகளைத் தாண்டி எமது தொழில் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்கும் எமது உள்நாட்டில் உள்ள திறமைகளின் பலம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கின்றது என Softlogic Life இன் பிரதம டிஜிட்டல் கண்டுபிடிப்பு அதிகாரி சாரங்க விஜயரத்ன தெரிவித்தார்.

புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தொழில்துறையில் முதல் டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் நிதிச் சேவைத் துறையில் பல அலைகளை உருவாக்கி வருகிறது. தொழில்துறையில் நடைமுறையில் உள்ள 24-48 மணிநேர கணக்கு திறக்கும் காலக்கெடுவை முறியடித்து, புதிய முதலீட்டாளர்கள் CSE இல் தங்கள் மத்திய வைப்புத்தொகை அமைப்பு (CSE) கணக்குகளை ஒரு மணி நேரத்திற்குள் திறக்கும் திறனை ஒரு ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடிகளாக இருந்தது. . 100% டிஜிட்டல் செயல்முறையின் மூலம் 5,000 திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை உள்வாங்கிய இலங்கையில் Softlogic நிறுவனத்தை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்லும் முதல் நிறுவனமாக இந்த கண்டுபிடிப்பு வந்தது.

கடந்த தசாப்தத்தில், Softlogic Stockbrokers ஆனது ஒரு சில சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பங்குகளில் முதலீடு செய்வதில் இருந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செல்வத்தை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக வளர்ந்துள்ளது. சந்தை நுண்ணறிவுகளை உருவாக்க மற்றும் சிறந்த நிதி முடிவுகளை எடுப்பதில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு நிலையற்ற சந்தை சூழ்நிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் விருது பெற்ற ஆராய்ச்சிக் குழுவையும் நிறுவனம் கொண்டுள்ளது.

Softlogic Stockbrokers Pvt Ltd என்பது Softlogic Capital PLC இன் துணை நிறுவனமாகும் மற்றும் Softlogic Group நிதிச் சேவைத் துறையின் ஒரு பகுதியாகும். சொஃப்ட்லாஜிக் குழுமம் பல்வேறு நலன்களைக் கொண்டுள்ளது மற்றும் சில்லறை விற்பனை, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகளில் இருக்கும் மிகப்பெரிய நுகர்வோர் தளமாக இருக்கின்றது.

கையில் மதுவுடன், உள்ளாடை தெரிய தாய்லாந்தில் VJ பார்வதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பார்வதி தனது பிறந்தநாளை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவிற்கு சென்று கொண்டாடியுள்ளார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

பிரபல தனியார் நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்ணியாக பணியாற்றி வரும் VJ பார்வதிக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. இவரது instagramல் சுமார் 5.9 லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் இவர் சிறப்பு விருந்தினராக தோன்றி அங்கே இருந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

பல நேரங்களில் அவர் வெளியிடும் சில சர்ச்சை கருத்துகளால் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த பார்வதி, அண்மையில் தனது மாதச் செலவை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் தனது 28 வது பிறந்த நாளை கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார் தொகுப்பாளினி பார்வதி.

அங்கு ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறும் தண்ணீர் திருவிழாவில் அவர் பங்கேற்றுள்ளார். இதை Songkran Water Festival என்று அந்நாட்டு அழைப்பார்கள். அதேபோல தமிழர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருவிழா மற்றும் புத்தாண்டை கொண்டாடும் அதே நேரம் தாய்லாந்து மக்களும் எப்படி 13-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் அதிலும் பார்வதி கலந்து கொண்டார்.

சாலைகளில் பெரும் திரளாக கூடிய மக்கள் ஒருவரின் மீது ஒருவர் தண்ணீரை பீச்சு அடித்து தங்கள் விழாவை விமர்சையாக கொண்டாடினர். தெருக்கள் எல்லாம் உலக புகழ் பெற்ற பல DJக்கள் மூலம் நிரம்ப பெற்று எங்கு பார்த்தாலும் இசைமயமாக இருந்தது. அந்த மகிழ்ச்சி கடலில் மிதந்த பார்வதி தண்ணீர் விழாவில் மது அருந்தி கொண்டு பயங்கர கிளாமராக தோன்றி கொண்டாடினர்.

மேலும் அந்த ட்ரிப் முழுவதும் தான் அடித்த லூட்டிகளை தனது ரசிகர்களுக்கு அறிவிக்கும் வகையில் அதை ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இப்பொது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்

பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினர் பெயரில் வங்கியில் கடன் பெறுவதற்காக சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்து வந்துள்ளார்.

அந்தப் பெண் 68 வயது ஆணின் மருமகள் எனக் கூறி, அவரது பெயரில் 17,000 ரைஸ் (சுமார் $3,250) கடனாகப் பெற முயன்றார்.

அந்த நபர், சக்கரநாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், கையெழுத்துப் போடும்போது மரணமடைந்தது போல வங்கி ஊழியர்கள் கருதினர்.

 

இதையடுத்து, ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர்.

அவர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.

உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த நபர் எப்படி, எப்போது இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சரக்கு கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் நாடு திரும்பினார்: வெளியுறவுத்துறை

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது.

இதற்கிடையே, சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்துவந்தது.

இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.