கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Date:

மொரகஹஹேன –  தலகல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன, கிரிவத்துடுவ, யகஹலுவ பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரின் வீட்டிற்கு பூஜைக்காக சென்று அந்த வீட்டின் மேன்மைக்காக சாந்திகர்ம பூஜை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்போது பூஜை செய்த நபர் முன்வைத்த தகாத யோசனை அந்த வீட்டுப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறித்த நபர் ஏதோ செய்ததாகக் கூறி பிரதான சந்தேகநபர் நேற்று (18) மாலை மற்றுமொரு குழுவுடன் சென்று தாக்கிய சம்பவத்தில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தகாத யோசனை குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....