முல்லைத்தீவில் படகுகள் தீக்கிரை

Date:

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....